அந்த நடிகர் மீது தான் நான் முதலில் ஆசைப்பட்டேன்! பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட சீக்ரெட்!

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகையான கரீனா கபூரின் முதல் காதல் ஈர்ப்பு யார்மீது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் டான்ஸ் இந்தியா டான்ஸ் என்ற நிகழ்ச்சியின் நடுவராக கரீனா கபூர் இருந்து வருகிறார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தான் தன்னுடைய முதல் காதல் ஈர்ப்பு யார் மீது இருந்தது என்பதைப் பற்றிய தகவலை வெளியிட்டார். கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த ஆஷிக் என்ற திரைப்படத்தில் நடித்த ராகுல் ராய் மீதுதான் தன்னுடைய முதல் காதல் ஈர்ப்பு இருந்ததாக கரீனா கபூர் கூறியுள்ளார்.

நடிகை கரீனா கபூர் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்ற போது அவரிடம் உங்களுடைய முதல் காதல் ஈர்ப்பு யார் மீது இருந்தது ? என்று கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த கரீனாகபூர் , ராகுல் தான் என்னுடைய முதல் காதல் ஈர்ப்பாளர் என்று கூறினார். மேலும் அவர் நடித்த ஆஷிக் என்ற திரைப்படத்தை அவர் எட்டுமுறை பார்த்ததாகக் கூறினார்.

பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த நடிகை கரீனா கபூர் தற்போது டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இது மட்டுமில்லாமல் இவர் "வாட் விமன் வாண்ட் " என்னும் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் நடிகை கரீனா கபூர் பல திரைப்படங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.