50 பேருக்காக, காத்திருந்து காத்திருந்து கடுப்பான கமல்ஹாசன்! திருச்சி பிரச்சார கொடுமை!

இன்று திருச்சியில் கமல்ஹாசன், அவரது டார்ச்லைட் வேட்பாளர் ஆனந்தராஜாவுக்கு வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


காலையில் கமல்ஹாசன் தயாராக இருந்தாலும், அவரை வரவேண்டாம் என்று தடுத்து நிறுத்தினார்களாம். ஏனென்று கேட்டபோது, ஏரியாவில் நிலவரம் கொஞ்சம் சரியில்லை, அதன்பிறகு வாக்கு சேகரிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதையும் நம்பிக்கொண்டு கமல்ஹாசன் இருந்திருக்கிறார். நேரம் ஆக ஆக, அவரது நிர்வாகிகள் டென்ஷனுடன் சுத்தியிருக்கிறார்கள்.

உண்மையில் என்ன விபரம் என்று கமல்ஹாசன் கேட்டபோதுதான், முதல் பாயிண்ட்டில் 50 பேர் கூட இன்னும் கூடவில்லை என்று உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்கள். அதைக் கேட்டதும் கமல் அப்செட். 

ஆனாலும் எத்தனை நேரம்தான் காத்திருக்க முடியும், கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் நூற்றுக்கும் மேலானவர்கள் வந்துவிட்டார்கள் என்ற தகவல் தெரிந்ததும் வீரமாக கிளம்பிவிட்டார். வேட்பாளரை ஆதரித்துப் பேசினாலும், கமல் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததாம்.

பாவம்ப்பா…