தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம்! ரஜினி கருத்தை வழிமொழிகிறேன்! நடிகர் கமல்ஹாசன் அதிரடி கருத்து!

தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது என்ற நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை மக்கள் நீதி மையத்தின் தலைவர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் வழி மொழிந்துள்ளார்.


சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது என கூறியிருந்தார். இவரது கருத்திற்கு திமுக மற்றும் அதிமுக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

மேலும் அதிமுக கட்சியினர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏற்கனவே வெற்றிடத்தை நிரப்பி விட்டார் எனவும், திமுக கட்சியினர் மு க ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் வெற்றிடத்தை நிரப்பி விட்டார் எனவும் மாறிமாறி தங்களது கருத்துகளை கூறி வந்தனர். 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழ்நாட்டில் ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது என்ற நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதை தவிர வேறு வழி இல்லை என கூறியுள்ளார். 

நல்ல தலைமைக்கு ஆளில்லை என்பதுதான் வெற்றிடம். நல்ல தலைமை இதற்கு முன்னால் இருந்தது என்பது உண்மை. இன்று இல்லை என்பதற்கு வருத்தப்பட்டுப் பயனில்லை. மேலும் நல்லவர்கள், வலிமை உள்ளவர்கள் பதவி ஏற்றாலும் ஏதாவது சிறுகுறைகள் வரத்தான் செய்யும்.

அதற்கான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை பழைய தலைவர்களிடம் இருந்தது. தற்போது உள்ள தலைவர்களுக்கும் அந்த தன்மை இருக்கவேண்டும் எனவும் நடிக்க கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் நடிகர்கள் பட வாய்ப்பு குறையும் போது அரசியலுக்கு வருகிறார்கள் என்ற முதலமைச்சர் எடப்பாடி சாமியின் கருத்துக்கு பதில் கூறிய நடிகர் கமல்ஹாசன் , தொடர்ந்து இதுபோன்று சொல்லிக் கொண்டு வருவதால் இது உண்மையாக வேண்டிய அவசியம் இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.