ஏன் உங்க உடம்பு இப்படி ஆகிவிட்டது? கமல் வெளியிட்ட வீடியோ! கூச்சத்தில் நெளிந்த ஷெரீன்!

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் சேரன் மிகவும் மெலிந்து உள்ளதாக கமல்ஹாசன் கூறியது சிறிது நேரம் கலகலப்பை ஏற்படுத்தியது.


பிக்பாஸ் சீசன்-3 மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இன்று இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாளாகும். பட்டத்தை யார் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மட்டுமின்றி போட்டியாளர்கள் இடையே கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பட்டத்தை முகன் வெல்வார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று போட்டியாளர்கள் தங்களுடைய சுவாரஸ்யமான நிகழ்வுகளை கமலுடன் பகிர்ந்து கொண்டனர். அனைவரும் பகிர்ந்துகொண்டு முடித்தபிறகு கமல் ஷெரினுக்கு ஒரு புகைப்படத்தை காண்பித்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் நேரத்தில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது அப்போது ஷெரின் மிகவும் உடல் பருமனாக காணப்பட்டார்.

தற்போது ஷெரின் மிகவும் இளைத்துள்ளார். இவ்விரு புகைப்படங்களையும் ஒன்றாக வைத்து கமலஹாசன் ஷெரினிடம் காண்பித்த போது அவர் பேரதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் கூறுகையில், "இப்படியா இருந்தேன். அந்த உடையில் எடுத்துக்கொண்ட சில வீடியோக்களை பார்த்த போது நானே அதிர்ச்சி அடைந்தேன்" என்று கூறினார். உடனடியாக கமல், "இந்த புகைப்படமானது வெளியிலிருந்து வந்தது. ரசிகர்கள் அனைத்தையும் கவனித்து வருகிறார்கள். இந்த முயற்சியானது கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். இந்த மகிழ்ச்சியை நீங்களும் வெளியே வரும்போது உணர்வீர்கள்" என்று கூறினார்.

இந்த கருத்துப்பரிமாற்றம் ஆலயம் பிக்பாஸ் வீட்டில் சிறிது நேரம் கலகலப்பை ஏற்படுத்தியது.