இந்தியன் 2ல் கமலுடன் நடிக்க முடியாது! காஜல் அகர்வால் ஓட்டம்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கு என்று பெரும் புகழையும் திரளான ரசிகர் கூட்டத்தையும் கொண்டிருப்பவர் என்றே கூறலாம்.


இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோருடன் நடித்து பெரும் புகழை பெற்று உள்ளார். இதேபோல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காஜலிற்கு தற்போது ஷங்கரின் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் -2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 1993-ஆம் ஆண்டு, இந்தியன் -1 திரைப்படம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றது. இதனையடுத்து மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளார் இயக்குனர் ஷங்கர்.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் ஒத்திவைத்து உள்ளனர். 

இந்தியன் -2 திரைப்படத்தில் நடிப்பதற்காக, நடிகை காஜல் அகர்வால் தயாராக உள்ளார்.  இருப்பினும் படக்குழுவினர் சார்பில்   படப்பிடிப்பை ஒத்தி வைத்திருப்பது என்பது அவருக்கு ஏமாற்றதை தருவதால் இந்த படத்தில் இருந்து விலகி கொள்ளலாமா? என நடிகை காஜல் யோசித்து கொண்டிருக்கிறார்.  ஆனால் இதனை பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் படக்குழுவினர் சார்பில் வரவில்லை. 

காஜல் அகர்வால் தற்போது கோமாளி படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஓப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள "பாரிஸ் பாரிஸ்" என்ற திரைப்படமும் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.