கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் காப்பான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது .
சற்று முன்: வெளியானது சூர்யாவின் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி!

நடிகர் சூர்யா, மோகன்லால் ,ஆர்யா, சமுத்திரகனி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் ,இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கிவரும் காப்பான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது
இதற்கு முன்னதாக காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் சற்று தாமதமாக செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன .
மூன்றாவது முறையாக நடிகர் சூர்யாவும் இயக்குனர் கே வி ஆனந்த் இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .காப்பான் திரைப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .