காமசூத்ரா திரைப்பட நடிகை இளம் வயதில் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

காமசூத்ரா 3D பட நடிகை சையிறா கான் மரணமடைந்த செய்தி திரையுலகை உலுக்கியுள்ளது.


கடந்த   வெள்ளிக்கிழமை காலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். காமசூத்ரா 3D படத்தில் இவர்  ஷெர்லின் சோப்ரா என்னும் நடிகைக்கு பதிலாக தேர்வுச்செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தின் இயக்குநரான ரூபேஷ் பட்டேல் அவருடைய இரங்கல் செய்தியில் கூறியதாவது:

சையிறா கான் பாரம்பரிய  இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்ததால் அவரால் எளிதாக சினிமாவில் நுழைய இயலவில்லை. காமசூத்ரா 3D படத்தில் அவரை இடம்பெற வைப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

காத்திருந்ததிற்கு எங்களுக்கு பெருமையை சேர்த்துத்தந்தார்.இவரை விட இந்த படத்தில் வேறு யாராலும் சிறப்பாகப்பணியாற்றிருக்க முடியாது எண்றேக்கூறலாம். அவர் மறைவு செய்தியை கேட்டவுடன் மீளாத்துயரடைந்ததேன். மேலும் இதைப்பற்றி வெளியுலகில் எவரும் பகிராமல் இருப்பது பேரதிர்ச்சியை அளிக்கறது.

அவருடைய திறமைக்காக அவருக்கு நிச்சயம் அங்கீகாரம் அளிக்கப்படவேண்டும். இத்தகைய நடிப்பாற்றலுக்குப்பிறகும் அவர் பிரபலம் அடையாதது வருத்தம் அளிக்கிறது. இது இரங்கல் செலுத்த வேண்டிய நேரம் என்றும், அவரின் ஆண்மா சாந்தியடையட்டும்.