ரகசிய இடத்தில் கண்ணீர்விட்ட கே.எஸ் அழகிரி... காரணம் என்ன தெரியுமா?

வேட்புமனு தாக்கலுக்கு சில மணித்துளிகள் இருக்கும்போதுதான் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது காங்கிரசின் வழக்கம். ஏனென்றால் அந்த அளவுக்கு கட்சிக்குள் கடமுடாவென சத்தமும், சண்டையும் நடக்கும்.


ஒவ்வொரு நபரும் தனக்குத் தெரிந்த நபர் மூலம் வேட்பாளராக நிற்பதற்கு அழுத்தங்கள் கொடுப்பது வழக்கம். இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் இந்தமுறை இப்படியல்லாமல் முன்கூட்டியே வேட்பாளர் பட்டியலை ரெடி செய்ய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திட்டமிட்டுள்ளார். 

ஆனாலும், உத்தேச வேட்பாளர் பட்டியலை தயார் செய்துவரும் அவருக்கு பல தரப்பிலிருந்தும் நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அழுத்தங்கள் வரத் தொடங்கியுள்ளன. தி.மு.க.வில்தான் என்னை கண்ணீர் விட்டு அழவைக்கும் அளவுக்கு டார்ச்சர் செய்தார்கள் என்றால், சொந்தக் கட்சியுமா இப்படி என்று வெறுத்தே போய்விட்டார்.

அதனால், ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன அழகிரி செல்லை சுவிட்ச் ஆப் செய்ய சொல்லிவிட்டார். வழக்கமாக தான் தங்கும் இடத்தை விட்டு ரகசிய இடத்தில் இருந்தபடி பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

எப்படியும் தி.மு.க.தான் பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்போவுது, அதுக்கு எதுக்காக தனியே போகணும் என்கிறார்கள் கதர் பார்ட்டிகள்.