பாண்டிச்சேரியில் எளிதாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று சிலர் சொன்னதைக் கேட்டு ஜெகத்ரட்சனை அங்கு அனுப்பிவைத்தார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அவரும் அங்கே போய் வருங்கால முதல்வர் என்ற பந்தாவில் என்னென்னமோ பேசினார். கடைசியாக, புதுவையில் உள்ள 30 தொகுதிகளையும் தி.மு.க. வெல்ல வேண்டும் இல்லையென்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று பேசினார்.
ஸ்டாலினை மிரட்டிப் பார்க்கும் கே.எஸ்.அழகிரி... என்னடா நடக்குது இங்கே..?
இந்த விவகாரம் அறிந்ததும் காங்கிரஸ் கட்சி டென்ஷன் ஆனது. ஏனென்றால் புதுவையில் தி.மு.க.வுக்கு பெரிதாக வாக்கு வங்கி இல்லை. அதனால் டெல்லி மேலிடத்துக்குப் புகார் போனது. உடனடியாக ராகுல்காந்தி ஸ்டாலினுக்கு போன் போட்டு பேசியிருக்கிறார்.
புதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுகிறதா என்று ராகுல் காந்தி கேட்டதும் ஸ்டாலினுக்கு வெலவெலத்துவிட்டதாம். இல்லீங்க.. சும்மா எங்க கட்சியை பலப்படுத்தத்தான் அவரை அனுப்பினேன் என்று கூறி பல்டியடித்தார்.
அப்படியே ஜெகத்துக்கும் போனை போட்டு காங்கிரஸ்காரன் ராகுல் என்னை திட்டுறான்... நீயும் பல்டியடி என்று கேட்டுக்கொண்டார். அதனால், உடனே அவரும் நான் தி.மு.க. கூட்டணிதான் 30 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று பேசினேன் என்று கூறிவிட்டார்.
இத்தனை நடந்தாலும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு இன்னமும் கோபம் தீரவில்லை. ஆம், கே.எஸ். அழகிரி கூட்டணி குறித்து கடுமையாக பேசிவிட்டார். ‘புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி இடையே எந்த குழப்பமும் இல்லை. அங்கு ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தாலும் அது பேசி தீர்த்துக் கொள்ளப்படும்.
புதுவையை பொறுத்தவரை அந்த மாநில தலைவர்கள்தான் இதுபற்றி கருத்துகளை தெரிவிக்க வேண்டும். ஒருவேளை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அதை தீர்த்துக்கொள்ளும் நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
காங்கிரசை பொறுத்த வரையில் எல்லாவற்றுக்கும் எப்போதுமே தயாராக இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை நண்பர்களுடன் எப்போதுமே நண்பர்களாகவே இருக்கவே விரும்புகிறோம். நண்பர்களுடன் நாங்கள் ஒருபோதும் பகையை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை. ஒருவேளை அதற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் நாங்கள் தனித்து போட்டியிடவும் தயாராகவே இருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்று பேசியிருக்கிறார்.
ஆக, கூட்டணிக்குள் குழப்பம் இன்னமும் நீடிக்கிறது.