டிஆர் பாலுவிடம் இருந்து முக்கிய பதவியை பறித்த ஸ்டாலின்..!

சமீப காலமாகவே திமுகவின் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது முன்னாள் தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான கே.என்.நேரு அவர்கள் திமுகவின் முதன்மை செயலாளராக பதவி ஏற்றுள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சற்று சரிவை சந்தித்தது . ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி சரிவில் இருந்து மீண்டு வந்தது . மேலும் வரப்போகிற சட்டமன்ற தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல அதிரடி மாற்றங்களை தங்களுடைய கட்சியில் செய்து வருகிறது.

அந்தவகையில் தற்போது திமுக கட்சியில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டி.ஆர்.பாலு நாடாளுமன்ற திமுக எம்பிக்கள் குழுத் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். ஆகையால் கே.என்.நேருவுக்கு கட்சியில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட செயலாளராக இருந்து வந்த கே.என்.நேரு தற்போது திமுகவில் முதன்மை செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் தமது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறார்.