அஸ்வின் அணிக்கு "குட் பை" சொல்லி வீட்டுக்கு அனுப்பிய தினேஷ் கார்த்திக்!

கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான ipl போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிங்ஸ் XI  பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை எடுத்தது. கிங்ஸ் XI  பஞ்சாப் அணியின் சாம் குர்ரான் சிறப்பாக விளையாடி 24 பந்துகளில் 55 ரன்களை விளாசினார்.பூரான் 27 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வாரியர் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சுப்மண் கில் அவுட் ஆகாமல் 65 ரன்களை குவித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்.கிறிஸ் லின் 22 பந்துகளில் 46 ரன்களை விளாசினார். இதனை கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கிங்ஸ் XI பஞ்சாப் அணி பிலே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.