சுனில் நரைன் , கிறிஸ் லின் அசத்தல்! புள்ளிபட்டியலில் KKR நம்பர் 1 !

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் 20 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே எடுத்தது.

அந்த அணியின் சார்பில் ஸ்டீவ் ஸ்மித் அவுட் ஆகாமல் 73 ரன்களை  எடுத்தார். ஜோஸ் பட்லர் 37 ரன்களை சேர்த்தார்.கொல்கத்தா அணியின் குர்னே சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை தொடக்கம் முதலே அடித்து நொறுக்கியது.அதிரடியாக ஆடிய சுனில் நரைன் 47 ரன்களுக்கும் , கிறிஸ் லின் 50 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்ன களமிறங்கிய உத்தப்பா அவுட் ஆகாமல் 26 ரன்களை எடுத்தார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13.5 ஓவர்களிலே வெற்றி இலக்கை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. நெட் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.