அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பாமீது பல்வேறு புகார்களும், அதிகாரமீறல் குற்றச்சாட்டுகளும் கூறப்பட்ட நிலையில், தமிழக அரசின் உயர் கல்வித் துறை அவர்மீது ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது என கூறியிருக்கிறார் வீரமணி.
சூரப்பா - பதவி விலகப்பா. தமிழக அரசுக்கு கி.வீரமணி பாராட்டு.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் கலையரசன் அவர்கள் குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை தருவார் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பா, உடனடியாக பதவி விலகினால்தான், பாரபட்சமின்றி விசாரணை நடத்த வாய்ப்பாக இருக்கும்.
குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படும் துணைவேந்தர் அப்பதவியில் நீடித்தால், ஆவணங்கள்கூட ‘மாயமாகி' விடக் கூடும்; ஆகையால், பதவி விலகலோ அல்லது தற்காலிக விலக்கலோ ஏற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.