ஜூன் 2, உலக பாலியல் தொழிலாளர்கள் தினம். என்று தீரும் இந்த அவல நிலை..?

எந்த ஒரு பெண்ணும் விரும்பி ஏற்க விரும்பாத தொழில் என்றால் பாலியல்தான். ஆனால், அதில் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும் எக்கச்சக்க பெண்கள் தள்ளப்பட்டுத்தான் வருகின்றனர். அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கவும் செய்கிறார்கள்.


ஒரு கட்டத்தில் சாக்கடையில் விழுந்துவிட்ட காரணத்தால், அதிலேயே உழன்று வாழவும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கும் உரிமைகள் வேண்டும் என்று போராடிப் பெற்ற தினமே ஜூன் 2. அதனாலே இந்த தினம் உலக பாலியல் தொழிலாளர்கள் தினமாய் அனுசரிக்கப்படுகிறது. 

1976ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி, பிரான்சு நாட்டின் லியோன் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் புகுந்து, தங்களுடைய எதிர்காலத்துக்கான நியாயம் கேட்டு போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டம் தோல்வி அடைந்தாலும் அதன் விளைவாக இந்தப் பெண்களுக்கு சில உரிமைகள் அளிக்கப்பட்டன.

அந்த உரிமைகள் கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் தான் ஜீன் 2ந்தேதி பாலியல் தொழிலாளர் தினமாய் அனுசரிக்கப்படுகிறது. ஆனா, இந்த கொண்டாட்டத்தில் எந்த பெருமையும் இல்லை என்பதுதான் உண்மை.

ஆம், பணத்துக்காக தன் உடலை விற்கும் கொடுமை முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் நாளே உலக பாலியல்தினமாக கொண்டாடப்பட வேண்டும்.