சைஸ் 40..! போடனும்..! பலர் ஹேண்டில் செய்கிறார்கள்! ஆபாச அவதூறு குறித்து சோனியா அருண்குமாரின் நெத்தியடி பதில்!

இரண்டு மூன்று நாட்களாக ஏகப்பட்ட ஆபாச வக்கிர பதிவுகள். என்னுடைய உடலை குறித்து ஆபாச வக்கிர கமெண்ட்டுகள். 40 சைஸ் இருக்கும், இவளை போடனும், எத்தன பேர் கூட, எவனோ வாழ்றான் வகையறா கமெண்ட்ஸ். விஷயத்துக்கு போறத்துக்கு முன் இந்த வகையறா கமென்ட்டுகள் ஒரு மயிர் இழை கூட எனக்கு எந்த வித பதட்டத்தையோ சஞ்சலத்தையோ காயத்தையோ கவலையையோ ஏற்படுத்தவில்லை என்பதை கூறிக்கொண்டு தொடர்கிறேன்.


தொடர் மொபைல், லேப்டாப் பயன்பாடு, உடல் உழைப்பு குறைந்ததாலும் உடல் எடையை கவனிக்காமல் இருந்ததாலும் முன்பை விட உடல் எடை அதிகரித்தது. இதனால் எனக்கோ என்னை சார்ந்தவர்களுக்கோ எந்தவித பாதிப்போ கவலையோ ஏற்பட்டதில்லை. முன்பைவிட இன்னும் இன்னும் அன்பை செலுத்தக்கூடிய நபர்களும், நண்பர்களும், அளவுக்கடந்த மரியாதையும் செலுத்தக்கூடிய அன்பர்களும் சூழ்ந்த மிக மிக ஜாலியான வாழ்க்கையே என்னுடையது. 

ஆன்லைனில் இயங்கும் வெகு சில பெண்கள்ல நானும் ஒருத்தர்ன்னு எப்பவும் பெருமையாவே கூறிக்கொள்வேன். பல வக்கிர ஆபாச தாக்குதலை என் வலைதள பக்கங்கள்ல கொண்டு வராமல் உடனிருக்கும் நண்பர்களிடம் அவற்றை காட்டி சிரிக்கும் அளவுக்கே இந்த ஆன்லைன் அப்யூஸை கையாண்டு வருகிறேன். ஏனெனில் ஆன்லைனில் வக்கிரத்தை கக்கும் பொறுக்கிகளை திட்ட போய் நம்மை தொடரும் அன்பர்களும் நண்பர்களும் பதட்டமடைய வேண்டாம் என்றே பல குப்பைகளை இடது கையால் புறம் தள்ளி கடந்துள்ளேன். அவைகளால் இதுவரை எனக்கு நன்மையே ஒழிய எந்த வித இழப்பும் இல்லை என்பதே நிதர்சனம்.

சரி விஷயத்திற்கு வருவோம்.......ஒன்னு புரியல, தன்னுடைய உடலை நினைத்து பெண்கள் எதுக்கு அசிங்கப்படனும்? இதுவே நான், இப்படியே நான். பெண்களுடைய ஃபோட்டோ இல்லை, நீயூட் ஃபோட்டோ போட்டாக்கூட கவலையோ அசிங்கமோ பட வேண்டியது பெண்கள் இல்லை. பெண் வயிற்றில் பிறந்து பால் குடித்து உயிரோட நடமாடிட்ருக்க நாய்ங்க தானே அசிங்கப்படனும்? பெண்களுடைய ஆபாச படங்களை அவர்களுக்கு தெரியாமல் பெருமைக்கு நண்பர்களுடனோ, இணையத்திலோ பகிரும் பொறுக்கிகள் அசிங்கப்படனுமா இல்லை பெண்கள் அசிங்கப்படனுமா?

பெண்களுடைய அந்தரங்க புகைப்படங்களை அவர்களுக்கு தெரியாமல் பகிரும் அவலம் நடிகைகள் வசுந்த்ரா, அபிநயா முதற்கொண்டு அக்‌ஷரா ஹாசன் வரை நீள்கிறது. அவற்றிக்காக இவர்கள் அசிங்கப்படவோ வெட்கப்படவோ அவமானப்படவோ வேண்டியத்தில்லை. பதட்டமோ, கவலையோ, கோபமோ கூட பட வேண்டியதில்லை. இந்த கேவலமான வேலையை செய்ற பொறுக்கிகளே வெட்கப்படாம ஊர்ல சுத்தும்போது பெண்கள் எதுக்கு அசிங்கப்படனும்?

சில மாதங்களுக்கு முன் என்னுடைய ட்விட்டர் பயோவில் ’Handled by Multiple Admins’ என சேர்த்தேன். சேர்க்கும்போதே தெரியும் இதை ஆன்லைன் வக்கிரவாதிகள் ஆபாசமாக எழுதுவார்கள் என்று. தெரிந்தே தான் வைத்தேன். எவனோ அசிங்கமா பேசுறது பற்றி நாம் யோசிக்க வேண்டுமா அல்லது அவனுங்க யோசிக்கனுமா?ன்னு தோணுச்சு. அசிங்கமா பேசுறியா அது உன் பிரச்னை, ஆபாசமா பேசுறியா உன் பிரச்னை, வக்கிரமா பேசுறியா அது உன் பிரச்னை, பொறுக்கியா வாழ்றியா அது உன் பிரச்னை.....அவ்வளவே.

ஒரு முறை தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஆபாச வக்கிர கமெண்ட் வந்ததாம், அதனை தன்னுடைய உதவியாளர் டெலீட் செய்யலாமா என கேட்டாராம், அதற்கு வயதான கலைஞர் கூறினாராம், அப்படி கமெண்ட் செய்தது நாம் யார் என்பதை குறிக்கப்போவதில்லை, அவன் தகுதியையே அது காட்டும் என்றாராம்.

இணையத்தில் மட்டும் இல்லை வாழ்க்கையிலும் ஊரில் உள்ள பொறுக்கிகள் என்ன பேசுவானுங்க, என்ன நெனைப்பானுங்கன்னு யோசிக்கிறது நம்ம வேலை இல்லை. நிறைய வேலை இருக்கு. பெண்களோட பங்களிப்பு எல்லா இடத்துலையும் குறைவா இருக்கும்போது நமக்கான வேலை நிறைய இருக்குன்னு ஒவ்வொரு முறையும் தோணும். எவனோ கேலி, கிண்டல், வக்கிரமா, ஆபாசமா பேசுறதால நமக்கு எந்த இழப்பும் இல்லை எந்த அசிங்கமும் இல்லை என்பதை பெண்கள் முதல்ல நம்பனும்.....நான் ஆணித்தரமா நம்புறேன். :)

PS: பல நாள் கழிச்சு ஒரு பெரிய பதிவு அதுவும் ஞாயத்திக்கிழமை அதுவுமா எழுதிருக்கேன்.......நிச்சயமா இது பொறுக்கிளுக்கான விளக்கம் இல்லை, அவனுங்கலாம் அவ்ளோ ஒர்த்தும் இல்ல நமக்கு......இது முழுக்க முழுக்க பெண்களுக்கான பதிவு. முதல் இணைய தலைமுறை நாம்...நம்மை பின்பற்றி நிறைய பெண்கள் இங்க வருவாங்க. நாம என்னவா இருக்கோம்ங்குறது அவங்களுக்கு தெரியனும். இங்க இருக்க முகம் தெரியாத பொறுக்கிகளை கையாள தெரியனும். ஆபாச வக்கிர மென்ஷன்கள், பேச்சுகள் ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம் இல்லைன்னு பெண்கள் கடக்கனும். நன்றி :)