ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்! யாராவது ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும்! தவிக்கும் தந்தை! நெகிழ வைக்கும் சம்பவம்!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுள் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு தந்தை தள்ளப்பட்டிருக்கும் துயரநிலை பிரிட்டன் நாட்டில் ஏற்பட்டுள்ளது.


செனகல் நாட்டை சேர்ந்தவர் இப்ராஹிம். இவருடைய வயது 50. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.  இரண்டாவது மனைவிக்கு 3 ஆண்டுகள் முன்னர் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பிறந்தனர். இரண்டு மனைவிகளையும் சேர்த்து இப்ராஹிமுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

அந்த குழந்தைகளின் பெயர் மரியம் மற்றும் தெயே என்பனவாகும். இந்த குழந்தைகளுக்கு இதயம் மற்றும் நுரையீரல் தனித்தனியே உள்ளது. ஆனால் கல்லீரல், செரிமான உறுப்புகள் மற்றும் 3 சிறுநீரகங்கள் பொதுவாக அமைந்துள்ளன. இதனால் இருவரும் வாழ்வதற்கு இருவரின் உடல் நிலையும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் சமீப காலங்களில் மரியத்தின் உடல்நிலை மோசமாகி வருகிறது. அந்த குழந்தைக்கு இதயம் பலவீனமாக வருகிறது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்பதால் மரியத்தின் உடல்நிலை மோசமாக போனால் தெயேவின் உடல் நிலையும் குன்றிவிடும். மரியத்தின் இதய செயல்பாடு நின்றுவிட்டால் தெயேவின் உயிரும் பிரிந்துவிடும்.

இரட்டையர்கள் பிறந்தவுடன் இப்ராஹிம்,  ஜெர்மனி, நார்வே, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் குழந்தைகளை சிகிச்சைக்கு எடுத்து சென்றுள்ளார். இறுதியாக குழந்தைகள் பிறந்து 7 மாதங்களான பிறகு பிரிட்டன் நாட்டின் கார்டிஃப் நகரத்தில் அமைந்துள்ள "தி கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்" மருத்துவமனையில் அனுமதித்தார்.

இறுதியாக மருத்துவர்கள் இரட்டையர்களில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற இயலும் என்று கூறிவிட்டனர். எந்த குழந்தையை காப்பாற்றுவது என்ற துயரநிலையை இப்ராஹிம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவமானது பிரிட்டன் மருத்துவமனையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.