பெங்களூர் சிறையில் ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட உணவில் விஷம் போன்று ஏதேனும் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சிறையில் ஜெயலலிதா உணவில் மெல்லக் கொல்லும் விஷம்! பீதி கிளப்பும் புதிய தகவல்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உள்ளது. ஓராண்டுக்கும் மேலாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையிலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் அதிகமானதே தவிர குறையவில்லை. இந்த நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெயலலிதா மரணம் குறித்து திடுக்கிடும் சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.
ஜெயலலிதாவிற்கு போயஸ் கார்டன் மற்றும் அப்பல்லோவில் கொடுக்கப்பட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று ஒரு வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது. இது குறித்து பேசிய திருமுருகன் காந்தி போயஸ் கார்டன் மற்றும் அப்போலோவில் கொடுக்கப்பட்ட உணவை விட ஜெயலலிதாவிற்கு பெங்களூரு சிறையில் வைத்து கொடுக்கப்பட்ட உணவு பற்றித்தான் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏனென்றால் பெங்களூர் சிறையில் இருந்து திரும்பிய பிறகுதான் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாகி உள்ளது. அதன் பிறகு ஜெயலலிதாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே ஜெயலலிதாவிற்கு பெங்களூரு சிறையில் கொடுக்கப்பட்ட உணவில் ஏதேனும் கலந்து இருக்கலாம் என்று திருமுருகன் காந்தி திகில் கிளப்புகிறார்.