ரஜினி வேண்டுமானால் அதிசயத்தை நம்பலாம்! ஆனால் நாங்கள் நம்புவது யாரைத் தெரியுமா? ஜெயக்குமார் பதிலடி!

நடிகர் ரஜினிகாந்த் வேண்டுமானால் அதிசயம் மற்றும் அற்புதம் ஆகியவற்றை நம்பலாம். ஆனால் நாங்கள் எப்போதுமே மக்கள் , வாக்காளர்களை மட்டுமே நம்பி உள்ளோம்.


நடிகர் கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 60 வருடங்கள் ஆனதை அடுத்து அதை கொண்டாடும் வகையில் உங்கள் நான் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது.

 இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அதிசயம் நடந்தது. இதுபோல அதிசயம் நாளையும் நடக்கலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

தமிழகத்தில் புதிய தலைமை தகவல் ஆணையரை நியமிப்பது பற்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பின்பு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுமானால் அதிசயத்தை நம்பலாம் நாங்கள் மக்கள் மற்றும் வாக்காளர்களை மட்டுமே நம்பி உள்ளோம் என்று ஜெயக்குமார் ரஜினியின் கருத்துக்கு பதிலளித்தார்.

மேலும் ரஜினி சொன்ன அதிசயம் அற்புதம் போன்றவையெல்லாம் அதிமுகவுக்கு தான். 2021 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் . மீண்டும் நாங்கள் ஆட்சி அமைக்கப்போவதை ரஜினிகாந்த் அதிசயம் என்று கூறியிருக்கலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.