பும்ராஹ்வின் இழப்பை ஈடு செய்ய மும்பை அணியில் இணையும் அசுர வேகப்பந்து வீச்சாளர்!

மும்பை இந்தியன் அணி விளையாடும் அடுத்த ஓரிரு போட்டிகளில் பும்ராஹ்விற்கு பதிலாக லசீத் மலிங்கா விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


உள்ளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் துவங்கியது.

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டியின் போது காயமடைந்த மும்பை வீரர் ஜஸ்ப்ரிட் பும்ராஹ், மும்பை அணி விளையாடும் அடுத்த சில போட்டிகளில் விளையாட முடியாத ஏற்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கிய வீரரான பும்ராஹ்விற்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படும் நிலையில், பும்ராஹ்வின் இடத்தை நிரப்ப இலங்கை அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான லசீத் மலிங்காவிற்கு பி.சி.சி.ஐ., அழைப்பு விடுத்துள்ளாக தெரிகிறது.

பி.சி.சி.ஐ.,யின் கோரிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் வாரியமும் பச்சை கொடி காட்டியுள்ளதால் மிக விரைவில் இந்தியா வரும் லசீத் மலிங்கா, பும்ராஹ் காயத்தில் இருந்து மீண்டு வரும் வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவார் என தெரிகிறது.