இந்து மதத்தை சேர்ந்தவரின் கடையில் பொருட்கள் வாங்கிய முஸ்லீம் பெண்களுக்கு முஸ்லீம்களால் நடுரோட்டில் ஏற்பட்ட கதி! அதிர்ச்சி சம்பவம்!

இஸ்லாமியர்கள் சிலர், இந்து துணிக்கடையில் இருந்து துணி வாங்கியதற்காக இஸ்லாமிய பெண்கள் மீது  தாக்குதல் நடத்தியுள்ள வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கர்நாடகா மாநிலத்தில் தேவாங்கர் என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் புகழ்பெற்ற துணிக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த துணிக்கடையின் முதலாளி இந்து ஆவார். இங்கு இஸ்லாமிய பெண்கள் சிலர் துணிகளை வாங்கிவிட்டு கடைக்கு வெளியே வந்துள்ளனர்.

அப்போது இஸ்லாமியர்கள் சிலர் அந்த பெண்களை அநாகரீகமாக திட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி ரமலான் மாதத்தில், இந்து முதலாளியின் கடையிலிருந்து துணி வாங்கியதற்காக அவர்களை பகிரங்கமாக தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களிடம் எவ்வளவோ முறையிட்டுள்ளனர். ஆனால் அங்கே இஸ்லாமியர்கள் பெண்களை சித்திரவதை செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி துணிகள் காவி வகைகளில் இருந்ததாலும் இஸ்லாமியர்கள் கோபம் அடைந்துள்ளனர். பெண்களிடமிருந்து அந்த காவி பையை பிடுங்கி, அதனுள்ளிருந்த துணிகளை வெளியே வீசியுள்ளனர். சம்பவத்தின் தொடர்ச்சியாக, இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்ட பெண்களை ஒரு ஆட்டோவில் வலுக்கட்டாயமாக அமர வைத்து அதே கடைக்கு சென்று துணிகளை திரும்பத் தருவதற்கு வற்புறுத்தியது பதிவாகியுள்ளது. இது நகரின் மற்றொரு பகுதியில் இன்னொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது இஸ்லாமியர்கள் கூட்டமாக, புர்கா அணிந்த சில இஸ்லாமிய பெண்களை ஒரு கடைக்குள் செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.