இந்துக்களுக்கு ஆதரவாக ஜெகன் அவசர சட்டம். குடியுரிமை சட்டத்துக்கு நோ...! மதமாற்றத்துக்கு தண்டனை

ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிரடியாக பல்வேறு சட்டங்களை இயற்றி வருகிறார். அவற்றில் ஒருசிலவற்றைத் தவிர எல்லாமே சூப்பர் ரகமே. இப்போது ஜெகன் மோகனை கிறிஸ்த ஆதரவாளர் என்று தனிமைப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.


இந்த நிலையில், இந்து மதத்தையும், கோயிலையும் காக்கும் வகையில் ஓர் அவசர சட்டம் போட்டு இந்துக்கள் மனதை குளிர வைத்துள்ளார். அதாவது இந்து கோயில்களில் புகைபிடித்தல், மது அருந்துதல், பான் முதலியவற்றை பயன்படுத்துதல், எச்சில் துப்புதல் போன்ற அசுத்த செயலில் ஈடுபடுவோருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று இந்து மதத்தினை நேரடியாக அல்லது மறைமுகமாக தாக்குவது அல்லது தரக்குறைவாக விமர்சிப்பது, சொல்லாடல் மூலம் தாழ்த்தி பேசுபவது போன்ற செயலில் ஈடுபடுவோர் இந்திய அரசியல் சட்டம் மற்றும் ஆந்திர மாநில அறநிலைய சட்டப்படி பெயிலில் வரமுடியாத குற்றம் புரிந்தவராக தக்க தண்டனைக்கு ஆட்படுவார்கள் என்று 

இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர் இந்துக்கள் என்றாலும் தண்டனை உறுதி என்று சொல்லியிருக்கிறார். மேலும் வீதிகளில் தனியாகவோ, கூட்டாகவோ, வாகனம் மூலமாகவோ, அச்சடித்த காகிதம் மூலமாகவோ, மதப்பிரச்சாரம் செய்பவர்களை தடுத்து நிறுத்தும் அதிகாரம் அந்தந்த கிராம அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று ஜெகன்மோகன் ரெட்டி மீது தொடர்ந்து பலரும் குறை கூறிவந்த நிலையில், இப்படி ஓர் அவசர சட்டம் போட்டு அதிரடி செய்திருக்கிறார்.