இளம் நடிகையுடன் என் அப்பாவுக்கு அந்தரங்க உறவு..! அது அவரது தனிப்பட்ட விஷயம்! இளம் நடிகரின் பகீர் பேட்டி!

தன்னுடைய தந்தைக்கும் பிரபல நடிகை கங்கனா ராவத்துக்கும் இடையே இருந்த தொடர்பு வருத்தமளிப்பதாக நடிகர் சூரஜ் பஞ்சோலி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வளர்ந்து வரும் பாலிவுட் கதாநாயகர்களுள் சூரஜ் பஞ்சோலி ஒருவர். இவருடைய தந்தை புகழ்பெற்ற பாலிவுட் நடிகரான ஆதித்யா பஞ்சோலி ஆவார். இவருடைய தாயின் பெயர் ஜரீனா வஹாப். இவரும் பாலிவுட் நடிகையாவார். இதனிடையே 2015-ஆம் ஆண்டில் ஆதித்யா பஞ்சோலி மற்றும் புகழ்பெற்ற பாலிவுட் நடிகையான கங்கனா ராவத் இடையே தொடர்பு இருந்ததாக தகவல்கள் வெளியாயின. 

இது பாலிவுட் திரையுலகத்தில் பெரும் புயல் கிளம்பியது. இதுக்குறித்து சமீபத்தில் ஒரு உரையாடலில் சூரஜ் பஞ்சோலி தன் கருத்துக்களை கூறியுள்ளார். அதாவது, "இது என் பெற்றோரின் வாழ்க்கை. உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பர். அதுபோன்று அவர்களின் வாழ்க்கையிலும் சந்தித்துள்ளனர். அது அவர்களுடைய வாழ்க்கை. நான் அதில் தலையிடமாட்டேன். அவர்களுக்குள் நடந்ததை அவர்கள் சரி செய்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.

இவருடைய காதலியின் பெயர் ஜியா கான். இவர் 2013-ஆம் ஆண்டில் ஜியா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவமானது சூரஜின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் சமூக வலைதளங்களில் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். தற்போது இது குறித்த வழக்கானது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து சூரஜ் கூறுகையில், "ஊடகங்கள் ஒரு பக்கத்தின் கருத்தை மட்டும் கேட்டு என்னை விமர்சித்து வருகின்றனர். என் பக்கம் சார்ந்த கருத்துக்களை அவர்கள் இன்னும் கேட்கவில்லை. நான் என் பக்கம் சார்ந்த கருத்துக்களை கூறி அப்பாவியாக மாற விரும்பவில்லை. மேலும், ஊடகங்களால் உண்மையை வெளியே கொண்டுவர இயலாது. அதை நீதித்துறை தான் செய்ய வேண்டும். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்‌" என்று கூறியுள்ளார்.

நல்ல கதை உடைய படம் வரும்போது மீண்டும் நடிக்க தொடங்குவேன் என்றும் கூறியுள்ளார். இந்த உரையாடலானது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.