திடீரென பட படவென கொட்டித் தீர்த்த கனமழை..! சாலைகளில் ஓடிய வெள்ளம்! மிதக்கும் கார்கள்..! எங்கு தெரியுமா?

இஸ்ரேல் நாட்டில் பெய்து வரும் கனமழையால் அந்நாட்டு மக்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். வெள்ளத்தில் இருந்து இந்த மக்களை காப்பாற்றும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இஸ்ரேல் நாட்டில் டெல் அவிவ் நகரில் கடந்த சில தினங்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆகையால் இந்த நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக இரண்டு மணி நேரத்தில் 72 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்து உள்ளது. ஆகையால் அந்தநகரமே மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. 

மழை வெள்ளம் சூழ்ந்து தாழ்வான பகுதிகளை ஆக்கிரமித்து உள்ளதால் அடுக்குமாடிகுடியிருப்புகளில் கீழ் தளத்தில் வசித்து வரும் பொது மக்களின் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது . இதனால் அந்த வீடுகளில் வசித்து வரும் மக்கள் மிகப்பெரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் . மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஜன்னல் கம்பிகளை உடைத்து போலீசார் மற்றும் மீட்பு துறை அதிகாரிகள் மீட்டு எடுத்து வருகின்றனர். 

அதேபோல் அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைந்திருக்கும் லிஃப்டில் கீழ்தளத்தில் நீரில் மூழ்கி அவதிப்பட்டு வந்த ஆண் மற்றும் பெண் ஒருவர் இருவரையும் மீட்பு படையினர் இரும்பு கம்பிகளை உடைத்து காப்பாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் நீர் சற்று வடிய தொடங்கியுள்ளது.

இருப்பினும் பொதுமக்களை விழிப்புணர்வுடனும் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.