உதயநிதிக்கு ரெண்டே ரெண்டு போதுமா..? டென்ஷன் ஆகும் தி.மு.க. நிர்வாகிகள்.

தி.மு.க. சார்பில் நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள உதயநிதி, ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பது, திமு.க. நிர்வாகிகளிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


ஆம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி மற்றும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு உதயநிதி முடிவு செய்திருப்பதாக இளைஞரணி தெரிவித்து வருகிறது. இத்தனை காலமும் இந்த தொகுதிகளை கட்டிக் காப்பாற்றிவரும் தி.மு.க. நிர்வாகிகள் இதனால் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கின்றனர்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து, ஜெ.அன்பழகன் இரண்டு முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பின், தற்போது, அத்தொகுதி காலியாக உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், அத்தொகுதியில், உதயநிதி போட்டியிட வேண்டும் என, இளைஞரணியினர் விரும்புகின்றனர்.

அதேநேரம், கருணாநிதியின் பூர்விகமான திருவாரூர் தொகுதியில் இருந்தும் போட்டியிட வேண்டும் என்று பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டால் என்னவென்று உதயநிதி யோசித்து வருகிறாராம்.

ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது காரணமாக, எத்தனையோ நிர்வாகிகளின் எதிர்காலம் பாழாகிவிடும் என்று எண்ணுகின்றனர். மேலும், தொகுதியில் தங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்காது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதையெல்லாம் உண்மை என்று நிரூபிப்பது போன்று, இந்த இரண்டு தொகுதிகளிலும் வேலை செய்துவரும் நிர்வாகிகளுக்குப் பதிலாக ஐபேக் டீம் களம் இறங்க உள்ளதாம். இந்த விஷயம்தான் நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

ஓட்டையும் ஐபேக் டீமையே போடச்சொல்லுங்க என்று நிர்வாகிகள் டென்ஷன் ஆகிறார்கள்.