தமிழக பாஜக தலைவராக குப்புராமு என்பவர் தேர்ந்தெடுக்க படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெச். ராஜாவுக்கு அல்வா..! தமிழக பாஜக தலைவராகிறார் குப்பு ராமு..! இவர் யார் தெரியுமா?
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்று வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தற்போது தெலங்கானாவின் ஆளுநராக பதவியிலுள்ளார். இவர் ஆளுநராக பதவியேற்ற பிறகு தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது.இன்று தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜகவின் தலைமையிடமான கமலாலயத்தில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்காக டெல்லியிலிருந்து நரசிம்மன் சிவப்பிரகாஷ் உட்பட 3 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்தது.
மாநில நிர்வாகிகள், இளைஞரணி உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 42 இரண்டு பேர் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கமலாலயத்திற்கு வந்தனர். கட்சியின் முக்கிய தலைவரான எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், குப்புராமு உட்பட 6 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இறுதியில் தமிழக தலைவராக குப்புராமு, தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1986-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை பட்டினகாத்தான் உயர்நிலை ஒன்றிய ஊராட்சி தலைவராக 3 முறை பதவி வகித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார்.
இவர் பாஜக துணை தலைவராகவும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை அதிகாரப்பூர்வமாக குப்புராமு தமிழக பாஜக தலைவராக அறிவிக்கபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.