அரசுப் பேருந்தில் இனி எந்த வயதுப் பெண்ணுக்கும் இலவச டிக்கெட்! முதலமைச்சரின் அதிரடி திட்டம் அமலுக்கு வந்தது!

அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற சட்டம் புதுடெல்லியில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.


டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறினார். பெண்களின் பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த திட்டம் அமையும் என்று கருதுவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இத்திட்டம் குறித்து டெல்லி போக்குவரத்து துறையிடம் அனுமதி பெறுவதற்காக கெஜ்ரிவால் காத்திருந்தார். தற்போது அதற்கான அனுமதியை அவர் பெற்று விட்டார்.

ஆகையால் இன்று முதல் புதுடெல்லியில் வாழும் பெண்கள், "டெல்லி போக்குவரத்து துறைக்கு உட்பட்ட பேருந்துகளிலும், ரயில்களிலும் இலவசமாக பயணிக்கலாம். இதன் மூலம் தங்களின் வசதிக்கு என்ற வாகனம் வரும் வரை பெண்கள் காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்கு இந்தியா முழுவதும் இந்த திட்டம் எடுத்துக்காட்டாக இருக்கும்" என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த செய்தியானது டெல்லியில் வாழும் அனைத்து பெண்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.