கொள்ளு சாப்பிட்டால் குதிரை பலம் கிடைக்கும்!! இது உண்மையா ??

முந்தைய தமிழர்கள் உணவில் சிறுதானியங்களின் பங்கு அதிகமாக இருப்பதுண்டு. கம்பு, கேப்பை, வரகு, சோளம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்து வகையான தானியங்களையும் உட்கொண்டதால்தான் அதீதபலத்துடன் திகழ்ந்தார்கள். நாம் இன்று பார்க்க இருப்பது கொள்ளு.


கொள்ளு என்றதும் நமக்குத் தெரிந்த ஒரே விஷயம், அது குதிரைக்கான உணவு என்பது. உண்மை அதுவல்ல, இது தமிழனின் இயற்கை உணவு. அதனால்தான், கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள். கொள்ளுவில் புரதம் அதிகளவில் இருப்பதால் உடல் வளர்ச்சிக்கும் பழுதடைந்த திசுக்களை சரிசெய்யவும் உதவுகிறது.

கொழுப்பைக் குறைப்பதில் கொள்ளு மிகப்பெரிய பங்குவகிக்கிறது. உடலில் தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்துவிடும். குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. 

ரத்த்த்தை சுத்திகரிக்கவும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும் கொள்ளு பயன்படுகிறது.  அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. அதனால் வாரம் ஒரு முறையாவது கொள்ளுவை எடுத்துக்கொள்ளுங்கள்.