போலீஸ்னா ஹெல்மெட் போட வேண்டாமா? சேலத்தில் சாமான்யர்களிடம் வசமாக சிக்கிய காக்கி சட்டை! வைரல் வீடியோ!

காவல்துறையினர் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்கு நபரொருவர் வாக்குவாதம் செய்த சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள வெங்களாபுரம் கிராமத்தில் ராஜவேல் என்பவர் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இவர் தன்னுடைய மகன் மற்றும் மகனின் நண்பரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்று கொண்டிருந்தார்.

தலைக்கவசம் அணியாமல் சென்றுகொண்டிருந்தபோது, தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ராஜவேலுவை நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர். வாக்குவாதங்கள் நடந்துகொண்டிருந்தபோது காவல்துறை அதிகாரிகள் 2 பேர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த ராஜவேலுவின் மகன் தன்னுடைய செல்ஃபோனில் படம்பிடித்து கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறை அதிகாரியான மதனலோகன் அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி கொண்டார்.

கள்ளச்சாராயம் விற்றுக்கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்து கொண்டிருந்த போது தலைக்கவசம் அணியாமல் சென்று கொண்டிருந்தனர். உடனே ராஜவேலுவின் மகனும் அவருடைய நண்பரும், காவல்துறையினர் மட்டும் தலைக்கவசம் அணியாமல் சென்றால் தவறில்லையா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகளவில் மழை பெய்து கொண்டிருந்ததால் அனைவரும் காவல் நிலையத்திற்கு சென்றனர். காவல்துறையினரின் தலைக்கவசம் அணியவில்லை என்பது குறித்து காவல்துறை ஆய்வாளர் ராஜவேலுவிடம் அறிவுரை வழங்கினார். "நாங்கள் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் மக்களின் உயிர்களை பாதுகாப்பதே எங்களுடைய முதன்மை நோக்கமாகும்" என்று காவல் ஆய்வாளர் மதனலோகன் உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.