வெண்ணெய் தின்றால் இதயத்துக்கு ஆபத்தா?சந்தேகம் தீர இந்த செய்தியை படிங்க!!

குழந்தைகள் கை நிறைய வெண்ணெய் தின்ற காலம் எல்லாம் போயே போச்சு. இப்போது வெண்ணெய் என்றாலே பெரியவர்களும் சிறியவர்களும், உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் என்று நினைக்கிறார்கள். கடவுள் கிருஷ்ணர் மட்டுமே அப்படி சாப்பிடமுடியும் என நம்புகிறார்கள்.


வெண்ணெய் சாப்பிட்டால் கொழுப்பு கூடிவிடும், இதயம் அடைத்துவிடும் என்று சொல்லப்படும் கருத்துகளில் உண்மை இருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். 

• வெண்ணெய்யில் வைட்டமின் ஏ சத்து நிரம்பியிருப்பதால் தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கிறது.

• லாரிக், லிசிதீன் போன்ற அமிலங்கள் வெண்ணெய்யில் இருப்பதால் உடலில் கொழுப்பு சேரவிடாமல் செமிக்க உதவுகிறது.

• பற்களை வலுப்படுத்தும் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துகள் வெண்ணெய்யில் நிறைந்துள்ளன.

• நோஞ்சான் குழந்தைகளுக்கு வெண்ணெய்யுடன் உணவு சேர்த்துக் கொடுத்தால் உடல் புஷ்டியாகும்.

விளையாட்டு வீரர்களும் அதிக உடல் உழைப்பு உள்ளவர்களும் வெண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். 40 வயதைத் தாண்டியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் மட்டும் வெண்ணெய்யை தவிர்த்தால் போதும்.