நாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்..! பக்தர்களை அதிர வைக்கும் காரணம்!

முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நீண்ட காலமாகவே சாய்பாபாவின் பிறப்பிடம் குறித்த சர்ச்சைகள் வலுத்து வருகிறது. பத்ரி தான் சாய்பாபாவின் பிறப்பிடம் என்று அறிவிக்க சிவசேனா முயற்சித்து வருகிறது. இதற்கு ஷீரடி அறக்கட்டளை கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. 

பத்ரியின் வளர்ச்சி பணிக்காக உத்தவ் தாக்கரே அரசு 100 கோடி ரூபாயை ஒதுக்கி அறிவித்துள்ளது. இதற்கு ஷீரடியில் அறக்கட்டளை அமைப்பினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரான வாக்சாவரே ஊர் மக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

கருத்துக்களை கேட்ட பிறகு கோவிலின் நடையை சாத்தி உதவாக்கரை அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இந்த சம்பவமானது சீரடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.