நிர்வாணச் சாமியார் முன்பு ஒருவர் கைகூப்பி சாஷ்டாங்கமாக வணங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அருகே உள்ள பெண்மணி தனது முகத்தை மூடி பக்தி பரவசத்தில் இருப்பது போன் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது.
நிர்வாணச் சாமியார் முன்பு மண்டியிட்டு வணங்குவது ஓபிஎஸ் மகனா? வைரல் புகைப்படத்தின் பரபர பின்னணி!
தமிழக அரசியலில் ஜெயலலிதா கால்களில் பலர் விழுந்திருந்தாலும் ஜெயலலிதா காலில் ஓபிஎஸ் விழுந்தது தான் தனி முத்திரை. 2001ம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் உட்கார வைக்கப்பட்ட போது ஓபிஎஸ் ஜெயலலிதா கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு செல்வார். அதன் பிறகு ஜெயலலிதாவை பார்க்கும் போதெல்லாம் அவர் காலில் விழும் பழக்கம் ஓபிஎஸ்சுக்கு உண்டு.
இதே போல் ஓபிஎஸ் மகனான தேனி எம்பி ரவீந்திரநாத்துக்கும் பெரியவர்கள் கால்களில் விழுவது பிடித்தமான ஒன்று. அண்மையில் கூட ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கால்களில் விழுந்து சாஷ்டாங்கமாக அவர் ஆசிர்வாதம் பெற்ற புகைப்படங்கள் வைரலாகின. இதே போல் பாஜக தலைவர்கள் பலர் கால்களிலும் ரவீந்திரநாத் விழுந்துள்ளார்.
இந்த நிலையில் நிர்வாணச் சாமியார் முன்பு ஒல்லியான அதே சமயம் அரசியல்வாதி போல் தோற்றம் கொண்ட ஒரு நபர் கை கூப்பி சாஷ்டாங்கமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமுக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் ஒல்லியாக இருக்கும் நபர் பார்க்க அச்சு அசலாக ரவீந்திரநாத் குமார் போல் உள்ளது.
மேலும் சாமியார்கள் கால்களில் விழ தயங்காதவர் ஓபிஎஸ் மகன் என்பதால் அந்த புகைப்படத்தில் இருப்பது ரவீந்திரநாத் தான் என்று கூறி சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ரவி ஆவார்.
பாஜகவை சேர்ந்த ரவி, அகோரி சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் தான் ரவீந்திரநாத் என்று தவறுதலாக பரப்பப்பட்டு வருகிறது. மேலும் உருவ ஒற்றுமை காரணமாக நிர்வாண சாமியாரிடம் ஆசிர்வாதம் பெறுவது தான் என்று தவறாக தகவல்கள் வைரல் செய்யப்படுவதாக ரவீந்திரநாத்தும் விளக்கம் அளித்துள்ளார்.