ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என்பதுதான் பா.ஜக.வின் எண்ணமாக இருக்கிறது. உடல்நிலையைக் காரணம் காட்டி கட்சி தொடங்க வாய்ப்பில்லை என்றதும், அமித்ஷாவின் ஆளாக உதயமூர்த்தி சென்று ரஜினியை மிரட்டியிருப்பதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முரளீதரன் பதிவு வெளியிட்டுள்ளார்.
ரஜினியை மிரட்டுகிறாரா குருமூர்த்தி..? அமித் ஷாவின் உத்தரவை ஏற்பாரா ரஜினி..?

அராஜகத்தின் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருக்கிறார்கள் பாஜகவினர்.... தனக்கு உடல்நலமில்லை கும்பலில்வந்தால் கோவிந்தாதான் என கும்பிட்டு ஒதுங்கும் ரஜினியை ஆள்வைத்து மிரட்டுகிறார் அமித்ஷா....
"தேர்தலில் இயக்கம் ஆரம்பித்து ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதறடி, அது போதும் எங்களுக்கு. அதை வைத்தே யாரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவது என்ற நம்பர் கேமை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். நீ கவலைப்படாமல் வீடியோ பிரச்சாரம் பண்ணு! ஊர் ஊருக்கு அலைய வேண்டாம். நாலு பெரிய நகரங்களில் ஹெலிகாப்டரில் வந்து பிரச்சாரம் பண்ணு"....
"ப்ரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் போல உன்னை, மனிதர்களின் சுவாசக்காற்றுகூட அண்டாமல் அடைகாக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. நீ பத்து படத்தி்ல் நடித்தால் என்ன சம்பாதிப்பாயோ அதை ஒரே செட்டில் மென்ட்டாக பேமலியிடம் செட்டில் செயகிறோம். யோசித்து பிஜேபிக்கு சாதகமான நல்லமுடிவெடு" என்று கெடு விதித்திருக்கின்றாராம் குருமூர்த்தி....
ஒருகாலத்தில் தருண் விஜய் என்ற ஒரு பிஜேபி எம்பியை வைத்து தமிழ்நாடு முழுக்க குறளுக்கு கும்மியடித்துப் பார்த்தார்கள். புஷ்ஷ்ஸென ஆனதுதான் மிச்சம்.. ஒன்றும் நடக்கவில்லை என்று புரிந்ததும் ....பிரதமர் மோடியை விட்டு பெருஞ்சித்திரனாரில் ஆரம்பித்து நிர்மலா சீத்தாராமனைவிட்டு சங்ககால புலவர்கள் ஒருவர்விடாமல் தொட்டுப்பேசியும்கூட தமிழகத்தில் ஒரு ஆணியும் புடுங்க முடியவில்லையே என்று சோர்ந்து போனார்களா? இல்லையே....
திருவள்ளுவரையும் திருக்குறளையும் சைவத் துறவிபோல வேஷங்கட்டி தமிழக வரலாற்றில் விஷம் தடவி கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள். நேற்றுகூட திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் பெரியார் சிலைக்கு காவிசாயம்.... எம்ஜியார் சிலைக்கு காவித்துண்டு… பாஜக லெட்டர் பேடில் எம்ஜியார் படம்… அதிமுக எம்பி லூசுத்தம்பியின் லெட்டர்பேடில் மோடி படம் என ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.