ராகுல் காந்தி எனும் ஒற்றை மனிதர்தான், இன்று மோடி அரசை கடுமையாக எதிர்த்து நிற்கிறார். அந்த எதிர்ப்பின் வலிமையில்தான், காங்கிரஸ் கட்சிக்கும் உயிர் இருப்பதாக தெரிகிறது.
ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி பறி போகிறதா..? காரணம் ராகுலா?
அதே நேரம், காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பழம்பெருச்சாளிகள் பலரும் தங்களின் பதவி, குழுச் சண்டை, காலைவாரிவிடுதல் ஆகியவற்றில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த தேர்தலில், மூத்த நிர்வாகிகளின் பதவி மோகத்தால்தான் தோல்வியைத் தழுவினோம் என்று கூறினார் ராகுல். அதனால்தான் தலைவர் பதவியில் இருந்தும் விலகினார்.
இதோ, பதவி ஆசையில் அலையும் கட்சிக்காரர்களுக்கு இன்னொரு உதாரணமாக மாறியிருக்கிறது ராஜஸ்தான். ஆனால், இதனை எந்த வகையிலும் தடுக்க இயலாமல் காங்கிரஸ் கட்சியின் தலைமை கையை பிசைந்துகொண்டு நிற்கிறது.
காரணம் என்ன தெரியுமா? “ஒரு எம்.எல்.ஏ.க்கு 15 கோடி விலைபேசுகிறது பாஜக....நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேட்கிறார்கள். பாஜகவின் சூழ்ச்சிகள் என்ன, அவற்றை எப்படி முறியடிப்பது என்று தெரியாமல் போனால் காங்கிரஸ் மேலும் பரிதாப நிலையைத்தான் அடையும்.
தேசிய அளவில் ராகுல் காந்தியும் உபி அளவில் பிரியங்காவும் குரல் கொடுப்பதால் மட்டுமே காங்கிரஸ் மீண்டுவர முடியாது என்பதைக் காங்கிரஸிலுள்ள படுமூத்த தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட கிழட்டு நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்றுதான் ராகுல் காத்திருக்கிறார்.
ஆனால், அந்த காத்திருப்பில் இளசுகள் மட்டும் வெளீயேறுவதுதான் பரிதாபம். என்ன செய்யப் போகிறார் ராகுல்..? ஒற்றை மனிதரால் தனி ராஜ்ஜியம் உருவாக்க முடியாதே…