மும்பை: ஒன்பிளஸ் 8 சீரிஸ் ரக ஸ்மார்ட்ஃபோன்களின் விலை பற்றிய விவரம் தெரியவந்துள்ளது.
விரைவில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 8..! விலை, ஸ்பெசிபிகேசன் என்னென்ன தெரியுமா?

ஒன் பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன் பிளஸ் 8 ரக ஸ்மார்ட்ஃபோன்கள் வரும் ஏப்ரல் 14ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்ஃபோன்களின் விலை எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுகிறது. இதையொட்டி, ஒன் பிளஸ் 8 சீரிஸ் ஃபோன்களின் விலை பற்றி ஒன் பிளஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பீட் லா ஒரு உண்மையை தெரிவித்துள்ளார்.
ஆம், இந்த ஃபோன்களின் விலை 1,000 அமெரிக்க டாலர்களுக்குள்தான் இருக்கும் என்று, அவர் Business Insider ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 1,000 அமெரிக்க டாலர்கள் எனில் இந்திய மதிப்பில் ரூ.76,400 ஆகும். இது Samsung S20 5G ஸ்மார்ட்ஃபோன் விலையை விட குறைவுதான். சாம்சங் எஸ்20 5 ஜி ஃபோன்களின் ஆரம்ப விலையே 1,000 டாலர்களுக்கு மேல் ஆகும்.சாம்சங் போன்களை போலவே, ஒன் பிளஸ் 8 சீரிஸ் போன்களும் 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்குகின்றன.
இவற்றிற்கு ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓசி உள்ளது. தவிர, ஏ பிளஸ் கிரேட் டிஸ்பிளே உள்ளிட்ட அதிநவீன அம்சங்களும் ஒன் பிளஸ் ஃபோனின் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, 6.50 இன்ச் தொடுதிரை, 48 மெகாபிக்சல் + 16 மெகா பிக்சல் + 2 மெகாபிக்சல் என பின்புறத்தில் 3 கேமிராக்கள், இதுதவிர செல்ஃபி கேமிரா, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, உள்ளிட்டவை ஒன் பிளஸ் 8 ஃபோன்களின் மற்ற சிறப்பம்சங்களாகும். இவை விற்பனைக்கு வந்ததும், ஆப்பிள், சாம்சங் விற்பனை பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.