கருணாநிதியை நம்பி ஏமாந்த ராதாரவி... அவரே வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.விற்கு வந்திருக்கும் நடிகர் ராதாரவி, புதுச்சேரியில் பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது கருணாநிதி, ஸ்டாலின், கமல் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.


பாஜகவில் சேர்ந்த பிறகுதான் எனக்கு இந்தி கற்றுக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்தி படித்திருந்தால் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா கூடவே நடித்து இருப்பேன். இந்தியை கற்றுக் கொள்ளக்கூடாது என்று திமுக.தான் கூறியது. ஆனால், ஸ்டாலின் குடும்பத்தார் அனைவரும் இன்று இந்தி பேசுகிறார்கள். 

தூர்தர்ஷன் என்ற பெயரை மாற்றக்கோரி கருணாநிதி தலைமையில் டிவியை உடைக்கும் போராட்டம் நடந்தபோது நானும் டிவியை போட்டுடைத்தேன். ஆனால், கலைஞர் உடைத்த பெட்டியில் ஒன்றுமே இல்லை. ஆனால், நான் நிஜமான பெட்டியை போட்டு உடைத்துவிட்டேன். என்னை ஏமாற்றிவிட்டார் கருணாநிதி என்று கூறினார்.

அத்துடன் எத்தனையோ தயாரிப்பாளரை நடுத்தெருவில் நிறுத்திய கமல்ஹாசன் இப்போது நடுத்தெருவில் அலைகிறார் என்று கிண்டல் செய்தார்.