வாடிக்கையாளர் ரகசியங்களை கசியவிட்ட பாலிசி பஜார் இன்சூரன்ஸ் கம்பெனி! பெரும் தொகையை அபராதமாக விதித்த மத்திய அரசு!

இணையதளம் மூலம் காப்பீடு விற்பனை செய்வதில் முண்ணனியாக இருக்கும் பாலிசி பஜார் ஆன்லைன் நிறுவனத்திற்கு ரூ .1.11 கோடி அபராதம் விதித்து. காப்பீட்டுத் துறையில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்.


புதிய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் நோக்கில் அதன் இணையதளத்தில் விளம்பரங்கள் செய்தது. மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை, வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டது போன்ற பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக பாலிடிபஜார்.காம் மீது ஐ.ஆர்.டி.ஏ.ஐ ரூ .1.11 கோடி அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த நிறுவனம் தனது இணையதளத்தில் பல்வேறு தயாரிப்புகளின் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதை கண்டறிந்தது. இணைய காப்பீடு விற்பனை விதிமுறைகளை மீறியுள்ளதாக இந்த நிறுவனத்தின் மீது ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை, காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர வேறு நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள கூடாது என்பது காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதி.

ஆனால் அதை மீறி. பல வங்கிகளுக்கு தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை பதிந்தது மட்டுமின்றி. மொத்தம் எட்டு விதிமீறல் குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதை IRDAI உறுதி செய்து, மேற்கொண்ட அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு. வாகன காப்பீடு தொடர்பான தவறான விளம்பரங்களை பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியதைக் கண்டறிந்து. அதற்காக இந்த நிறுவனத்திற்கு IRDAIவால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஐஆர்டிஏஐயின் இந்த முடிவை எதிர்த்து இந்திய காப்பீட்டுச் சட்டம், 1938 இன் பிரிவு 110 ன் படி இந்த வழக்கினை, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட அந்த நிறுவனத்திற்கு வாய்ப்புள்ளது இங்கே கவனிக்கத்தக்கது. 

2008ல்‌ தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 2.5 கோடி ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு பாலிசிகள் விற்பனை செய்துள்ளதாகவும். மாதத்திற்கு சராசரியாக 4 லட்சம் காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கிறது அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பு ஒன்று.

மணியன் கலியமூர்த்தி