என் 3 பிள்ளைகளுக்கும் அந்த இன்ஸ்பெக்டர் அம்மா தான் நிஜ தாய்..! காவல் நிலையத்தில் நெகிழ்ந்த 45 வயது ஜோதி!

வாழ்க்கையின் விளிம்பில் இருந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த போலீஸ் !


தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருந்த ஒரு குடும்பத்திற்கு உதவியதுடன் ஒரு பெண்ணுக்கு திருமண செலவுகளை பெண் காவல் ஆய்வாளர் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சிகர சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது போலீஸ் உங்கள் நண்பன் என்பதை பலமுறை இதுபோன்ற நெகிழ்ச்சிகர சம்பவங்களால் நிருபணம் ஆகிக் கொண்டே இருக்கிறது. 

ஓட்டேரியை சேர்ந்த ஜோதி என்பவர் தனது குழந்தைகளுடன் கடந்த 2017ம் ஆண்டு காவல்நிலையததிற்கு வந்து குடும்பத் தகராறு காரணமாக கணவர் ஓடிவிட்டதாகவும் 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் கண்ணீர்மல்க தெரிவித்தார். ஜோதியின் கண்ணீரை துடைக்க முடிவெடுத்த ஓட்டேரி காவல்நிலைய பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம்.

வீட்டு வேலைக்குச் சென்று பிள்ளைகளை காப்பாற்று என கூறினார். ஜோதியின் மகள் பிரியதர்ஷிணி, 10ம் வகுப்பு படித்திருந்தாள். அவளுக்குச் சம்பளத்துடன் கூடிய பாதுகாப்பான இடத்துக்கு ஆய்வாளர் ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் ஜோதியின் மற்றொரு மகனையும் மகளையும் படிக்க ஏற்பாடு செய்தார். ஜோதியின் மகன், விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார். ஜோதியின் 2வது மகள், 8-ம் வகுப்பு படித்துவருகிறார்.

இதற்கிடையே பிரியதர்ஷினி திருமணத்திற்கான சீர்வரிசை பொருள்கள் கட்டில், பீரோ, மெத்தை, 6 கிராம் தங்க கம்மல், பாத்திரங்கள், 10,000 ரூபாய் ஆகியவற்றை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையம் சார்பில் பிரியதர்ஷிணிக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள் கடந்த 5-ம் தேதி அயனாவரத்தில் பிரியதர்ஷிணிக்குத் திருமணம் நடைபெற்றது.