குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவுகளில் புழு பூச்சி அதிகமாக இருப்பதாக சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பூச்சி சாம்பார்! வண்டு பொறியல்! அங்கன்வாடி குழந்தைகளின் பரிதாப நிலை! அதிர்ச்சி ரிப்போர்ட்!
சேலம் மாவட்டத்திலுள்ள அங்காடிகளில் திங்கள், புதன் மற்றும் வியாழன்களில் குழந்தைகளுக்கு கலவை சாதம் மற்றும் முட்டை அளிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூக்கடலை சுண்டலும், பச்சைப்பயறு சுண்டலும் வழங்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட குமாரசாமிப்பட்டி என்னும் இடத்தில் இயங்கிவரும் அங்கன்சாவடியில், குழந்தைகளுக்காக அளிக்கப்படும் பச்சைப்பயிறு மற்றும் மூக்கடலைகள் மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டிருக்கும். அந்த மூட்டைகளில் வண்டு, புழு ஆகியன அதிகளவில் காணப்பட்டுள்ளன.
மேலும் சாம்பாரில் பயன்படுத்தப்படும் துவரம் பருப்பு, பொரியலுக்கு பயன்படுத்தப்படும் பச்சைப்பயிறு ஆகியவை பூச்சி அரித்தவாறு இருந்துள்ளன. இதனை சமைத்து சாப்பிட்ட குழந்தைகளுக்கு கடுமையான வயிற்று வலி முதலிய உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள குழந்தையின் பெற்றோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்து அங்கன்வாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.