திரையரங்குகளில் இருந்து பிகில் ஓட்டம்..! தீபாவளி ரேஸில் வெற்றிக் கொடி நாட்டிய கைதி! எப்படி தெரியுமா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைதி திரைப்படம் 250 தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பால் தற்போது 350 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் மற்றும் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படமும் போட்டியில் களமிறங்கின. எப்போதும்போல தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

அதேபோல் வெறும் கதையை மட்டுமே நம்பி களமிறங்கிய கைதி திரைப்படம் தன்னுடைய கதையை மட்டுமே மையமாக வைத்து ரசிகர்களிடத்தில் யாருமே எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரே ஒரு இரவில் நடைபெறும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கைதி திரைப்படம் ஹாலிவுட்டுக்கு நிகராக இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அசாத்தியமான இயக்கத்தில் உருவான கைதி திரைப்படம் முதலில் 250 தியேட்டர்களில் மட்டுமே வெளியானது. அதற்குப் பின்பு ரசிகர்களிடத்தில் அதற்கு ஏற்பட்ட வரவேற்பின் காரணமாக மேலும் 100 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 350 தியேட்டர்களில் கைதி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

25 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 12 நாட்களில் 80 கோடி வருமானத்தை ஈட்டி உள்ளது என்பது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்த தகவலை கைது திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர். பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வெற்றிக்கு வித்திட்ட ரசிகர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்த பதிவில் நல்ல படம் ஹிட்டாகும் அதற்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டும் எனவும் இந்த படத்தை வெற்றிப் படமாக மாற்றி தந்த ரசிகர்களுக்கு மிகவும் நன்றி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.