கொரானாவுக்கு இந்தியர்கள் பயப்பட வேண்டாம்..! வேலூர் பெண் மருத்துவ ஆராய்ச்சியாளர் கூறும் காரணத்தை கேளுங்க..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து இந்தியர்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று முன்னாள் விஞ்ஞானி அறிவுறுத்தியுள்ளார்.


உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 3000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. 

இதனிடையே இந்த வைரஸ் தாக்குதல் குறித்து இந்தியர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் இந்திய விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான ககன்தீப் காங் கூறியுள்ளது நாட்டு மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.

அவர் கூறியதாவது:

கொரோனா வைரஸ் குறித்து யாரும் பயப்பட வேண்டியதில்லை. இந்த நோயால் தாக்கப்பட்ட 5-ல் 4 பேர் தாங்களாகவே மீண்டு வருவர். காய்ச்சல் அல்லது இருமலுக்கு சாதாரண பாராசிட்டமால் பயன்படுத்தினால் போதும். மீதமுள்ள ஒருவர், மருத்துவரை சந்திக்க நேரிடலாம்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மட்டுமே உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். இந்த நோயானது குழந்தைகளை சற்று கூட பாதிக்கும் தன்மையுடையது அல்ல. மாறாக ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, இதய நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை இந்த நோய் பெரிதளவில் தாக்குகிறது. இந்த நோயை தடுப்பதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நிச்சயமாக இந்த ஆண்டு இறுதிக்குள் அத்தகைய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.

தங்களுக்கு வைரஸ் தாக்கியுள்ளதாக அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய கைகளை நன்றாக கழுவ வேண்டும். பிறருடைய முக உறுப்புகளை தேவையின்றி தொடுவதை கைவிட வேண்டும்" என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இவருடைய அறிவுரையானது இந்திய மக்களை சிறிதளவில் நிம்மதி அடைய வைத்துள்ளது.