கடும் குளிர்..! சூட்டுக்காக போடப்பட்ட ஒரு ஸ்விட்ச்..! மறுநாள் குழந்தைகளுடன் சடலமாக கிடந்த தம்பதிகள்! நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சம்பவம்!

கேரளாவில் இருந்து நேபாளத்திற்கு தங்களுடைய விடுமுறையை கொண்டாட சென்ற 8 பேர் ஹோட்டல் ரூமில் பொருத்தப்பட்டிருந்த ஹீட்டரில் இருந்து வெளிவந்த உடலுக்கு அபாயகரமான கேசினால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருந்து 15 பேர் கொண்ட குழு நேபாளத்திற்கு சுற்றுலா சென்றனர். தங்களுடைய விடுமுறையை கொண்டாடுவதற்காக 15 பேர் கொண்ட குழு திருவனந்தபுரத்திலிருந்து நேபாளத்திற்கு சென்றிருக்கிறது. இந்தக் குழுவானது தங்களுடைய சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புவதற்கு திட்டமிட்டிருக்கிறது.

அவ்வாறாக இந்தியாவுக்கு திரும்பிச் செல்வதற்காக அவர்கள் போகாராவுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்படியாக நேபாளத்தில் உள்ள டாமன் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தனர். அந்த இடம் மிகுந்த குளிர் பிரதேசம் ஆகும். கடலில் இருந்து சுமார் 2500 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இதனால் அங்கிருக்கும் மக்கள் பொதுவாகவே தங்களுடைய அறைகளில் ஹீட்டரை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சுற்றுலா சென்ற 15 பேர்களில் 8 பேர் ஒரே அறையில் தங்கி இருந்திருக்கின்றனர். மீதமிருந்த 7 பேர் மற்றொரு அறையில் தங்கி இருக்கின்றனர். அதாவது ஒரு ரூமில் தங்கி இருந்த பிரபின் குமார் நாயர் (39), சரண்யா (34), ரஞ்சித் குமார் டி.பி. (39), இந்து ரஞ்சித் (34), ஸ்ரீபத்ரா (9), அபிநவ் சூர்யா (9), அபி நாயர் (7) மற்றும் வைஷ்ணவ் ரஞ்சித்(2) ஆகிய 8 பேர் தங்கியிருந்தனர். 

இவர்கள் 8 பேரும் தங்களுடைய உடலை சூடாக வைத்திருப்பதற்காக ஹோட்டல் ரூமில் பொருத்தப்பட்டிருந்த ஹீட்டரை ஆன் செய்துள்ளனர். ஹீட்டரில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைட் என்ற நச்சு புகையை சுவாசித்த அனைவரும் மூச்சுத் திணறி மயக்க நிலையை அடைந்திருக்கின்றனர். இதில் இரண்டு பேர் ஆண்கள், இரண்டு பேர் பெண்க்ள, இரண்ட சிறுவர்கள், இரண்டு சிறுமிகள் ஆகியோர் அடங்குவர். 

இந்த அறையில் இருந்த இவர்கள் 8 பேர் மட்டும் மயங்கியதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . உடனே அந்த ஓட்டலின் மேனேஜர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்திருக்கிறார்

. தகவல் அறிந்த போலீசார் மயக்க நிலையில் இருந்த அனைவரையும் மீட்டு விமானத்தின் மூலம் காத்மாண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அப்போது அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர் என்று கூறி இருக்கிறார்.

இவர்கள் இறப்பிற்கு ஹீட்டரில் இருந்து வெளியான நச்சுப்புகை தான் காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.