கெத்து காட்டிய இந்திய ஹேக்கர்கள்! பாகிஸ்தான் வங்கியின் இணையதளத்தில் தேசிய கொடியை பறக்க விட்ட அபாரம்!

பாகிஸ்தான் நாட்டின் வங்கியை இந்திய ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தான் நாட்டில் ஃபர்ஸ்ட் மைக்ரோ பினான்ஸ் பேங்க் என்ற தேசிய மையமான வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு மொத்தம் 83 கிளைகள் அந்நாட்டில் உள்ளன. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதியன்று இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தது. ஆகையால் இன்று பாகிஸ்தான் தன்னுடைய 73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த நீயோ ஹேக்கர்ஸ் என்ற குழுவானது ஹேக் செய்துள்ளது. இதனால் பாகிஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலில் "இந்திய நாட்டிற்காக பாடுபட்டு இறந்த இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான்,  பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் முட்டாள்கள்.

அதனால் தான் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதியன்று கருப்பு தினமாக அறிவித்துள்ளீர்கள்‌. அதனால் தான் நாங்கள் உங்கள் சுதந்திர தினத்தை சர்வதேச தீவிரவாதிகள் தினமாக அறிவித்துள்ளோம். காஷ்மீர் தற்போது இந்தியாவின் அங்கமாகிவிட்டது. கூடிய விரைவில் பாகிஸ்தானும் இந்தியாவிற்குள் இணைக்கப்படும்" என்று பதிவிடப்பட்டது.

முடங்கிய வங்கி சேவை தற்போது வரை சரியாகவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கியின் இணையத்தளமானது "டெஸ்டிங்-123. இணையத்தளத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் சரி செய்யப்படும். தவறுக்காக வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவமானது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மீண்டும் பாழாக்கிவிடும் வகையில் அமைந்துள்ளது என்று பலரும் கருதுகின்றனர்.