சீனா நடத்திய தாக்குதலில் இந்திய படையினரை காணவில்லை! இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு! நடந்தது என்ன?

இந்திய படைகளுடன் திடீரென சீனா நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் 20 பேரும், சீனா தரப்பில் 45 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்போதே இந்தியாவில் இருந்து சில படையினரை காணவில்லை என்றும் செய்தி பரவியது.


ஆனால், இதற்கு இந்திய தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும். நம் படையினர் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், இன்று 10 இந்திய விரர்களை சீனா விடுவித்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், இந்தியா மற்றும் சீனா தரப்பினருக்கும் இடையிலான மேஜர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தையின் நான்கு சுற்று முடிவில் அதிகாரிகள் உட்பட 10 இந்திய வீரர்கள் சீன இராணுவத்தால் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்போது அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்று மீண்டும் இந்தியா உறுதி அளித்துள்ளது.

இந்த நிலையில் பத்திரிகையாளர் கதிர்வேல் எழுப்பியிருக்கும் சில கேள்விகள் முக்கியமானதாக படுகிறது. இதுதான அவரது பதிவு. ‘ஜவான்கள துப்பாக்கி இல்லாம எல்லை ரோந்துக்கு அனுப்பி எதிரி கையால மரணம் அடைய விட்டது நியாயமா?”னு ராகுல் கேட்டார்.

ராணுவ அமைச்சர் பிசியா இருந்தார் போல. வெளிநாட்டு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் சொல்லிருக்கார். “உண்மைய சரியா தெரிஞ்சுக்கணும். ஜவான்கள் துப்பாக்கியோடதான் ரோந்து போனாங்க. கைகலப்பு வரும்போது துப்பாக்கி பயன்படுத்த கூடாதுனு இந்தியாவும் சீனாவும் ரெண்டு ஒப்பந்தம் போட்ருக்கு”. இதான் அமைச்சர் பதில்.

இத படிச்சதும் நமக்கு வர டவுட்ஸ்.

1. துப்பாக்கி வச்சிருந்தா 20 பேர சீனாக்காரன் அடிச்சே கொல்றப்ப தற்காப்புக்காக ஏன் சுடல?

2. சுடக்கூடாதுனு ஒப்பந்தம் போட்ருந்தா துப்பாக்கிய ஏன் தூக்கிட்டு போனாங்க?

3. சுட்டு கொன்னா ஒப்பந்தத்த மீறுனதா ஆயிரும்னா, கூரான ஆணிகள் பதிச்ச இரும்பு ராடால சீன ராணுவம் கொடூரமா அடிச்சு கொன்னது ஒப்பந்த மீறல் ஆகாதா?

4. எட்டு மணி நேரம் சண்டை நடந்துதுன்னா அதுவரை தகவல் கிடைச்சு உதவிக்கு யாரும் போக முடியாத நிலைமைதான் இருக்கா அங்க? இதற்கு பதில் சொல்வது யாரோ…?