மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனம்!

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 13 மாதங்கள் செயல்பட்டார். கடந்த நவம்பர் மாதம் ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றார். இந்நிலையில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் அவர்களை மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்துள்ளார்.

மொத்தமாக 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்கள் அவையில் 12 மாநிலங்களில் உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் தேர்வு செய்யலாம். விளையாட்டு, கலை,இலக்கியம்,பொருளாதாரம்,சமூக சேவை, அறிவியல்,பத்திரிகை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கலாம்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சிறப்பாக செயல்பட்டு வந்த ரஞ்சன் கோகாய் அவர்களை மாநிலங்களவை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் தேர்வு செய்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்ட ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.