விபரீத நீர் வீழ்ச்சி! தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற தன் உயிரை பறிகொடுத்த இளைஞர்! நெகிழ வைக்கும் நட்பு!

அமெரிக்காவில் நீரில் மூழ்கிய தன் நண்பனை காப்பாற்ற சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த அஜய் குமார் என்ற மாணவர் அமெரிக்காவின் அர்லிங்டன் நகரில் இருக்கும் டெக்சாஸ் பல்கலைக் கழத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை படித்து வருகிறார். தன்னுடைய விடுமுறை நாட்களை முன்னிட்டு இவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒக்லஹோமாவில் இருக்கும் டர்னர் அருவிக்கு சென்றுள்ளார். 

அப்போது அஜய்யின் , நண்பர் அந்த அருவியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். குளிக்க சென்ற அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இருக்கிறார். இதனைக்கண்ட அஜய் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்து தானும் அருவியில் குதித்து தனது நண்பரை காப்பாற்றுவதற்கு துணிந்திருக்கிறார். தன் நண்பனை காப்பாற்ற சென்ற அஜய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து அமெரிக்க போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அஜய்யின் உடலை இந்தியாவிலுள்ள அவருடைய இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.