21 வயசு இந்திய கிரிக்கெட் வீரரின் லவ்வர் இவர் தானாம்!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தனது காதலியை அறிமுகபடுத்தியுள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள இளம் வீரர்களில் முதன்மையாக கருதப்படுபவர் ரிஷப் பண்ட். சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து மஹேந்திரசிங் தோனி விலகியதை அடுத்து, அந்த இடத்தை நிரப்ப தினேஷ் கார்த்திக், சாகா, பர்திவ் பட்டேல் ஆகியோர் இடையே போட்டி நிலவியது. 

ஆனால் இவர்களது பேட்டிங் திறனை பொருத்தவரை திருப்திகரமாக இருக்கவில்லை. இந்த நேரத்தில் ரிஷப் பண்ட் தனது திறமையை நிரூபித்து இந்த இடத்தைப் பிடித்தார். மிக விரைவாகவே இந்திய அணியில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள ரிஷப் பண்ட் தவிர்க்க முடியாத வீரராகவும் மாறிவிட்டார். 

21 வயதே ஆன இவருக்கு தற்போது காதல் மலர்ந்துள்ளது. தனது காதலி யார் என்பதை சமூக வலைதளம் வாயிலாக அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த ஈஷா நெகி என்ற இளம் பெண்ணை காதலிப்பதாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர்கள் இருவரும் பதிவிட்டுள்ளனர். 

ரிஷப் பண்ட் இன் பதிவில், இவளது சந்தோசம்தான் எனக்கு முக்கியம் ஏனெனில் எனக்கு சந்தோசத்தை கொடுப்பவள் இவள்தான் என்று கவிதை நயத்துடன் கூறியுள்ளார். ஈஷா நெஹி பதிவில் இவர்தான் தனது உயிர் தனது வாழ்வின் காதலன் என்றும் உருகி உள்ளார். டெல்லியில் படித்த ஈஷா கட்டிடங்களில் உட்கட்டமைப்பை அலங்காரம் செய்யும் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.