யார்டா கண் வச்சது? இந்திய அணியில் மேலும் ஒரு வீரருக்கு காயம்! அதிர்ச்சியில் பிசிசிஐ!

பயிற்சியின் போது இந்திய அணியின் வீரரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கருக்கு அடிபட்டது என்று செய்தியானது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளது. 4 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணியினர் மூன்றில் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆட்டத்தில் 22ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதற்கிடையே ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயங்கள் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளன. புவனேஸ்வர் குமார் மாதம் இறுதிவரை உடல் தகுதி அடைய மாட்டார் என்றும், ஷிகர் தவான் ஜூலை மாதம் இறுதியில் தான் பூரண குணம் உடையவை என்று இந்திய அணியின் மருத்துவர்கள் அறிக்கையை வெளியிட்டனர்.

தற்போது இந்திய அணி ரசிகர்களுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. பயிற்சியின்போது நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா வீசிய பந்தானது, விஜய் சங்கரின் காலை பதம் பார்த்து விட்டது.

வலியால் துடித்த விஜய் ஷங்கரை அணியின் மருத்துவர் விரைந்து சென்று கவனித்தார். பின்னர் அவர் இன்று காலை முழுவதும் பயிற்சியில் ஈடுபட வில்லை. அணி நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர், விஜய் ஷங்கர் தற்போது நலமாக இருப்பதாக செய்தி யாளர்களிடம் தெரிவித்தது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் துல்லியமாக பந்துவீசி விஜயஷங்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.