இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் தனது நீண்ட நாள் காதலியை இன்று திடீரென கரம் பிடித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் கல்யாணம்! காதலியை கரம்பிடித்தார்!
இந்திய கிரிக்கெட் அணியின்
விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டு ஒரே ஒரு போட்டியில் விளையாடியவர் சஞ்சு
சாம்சன். ஆனால் ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்கா விளையாடி வரும் சஞ்சு
சாம்சனை தெரியாத ரசிகர்களே இருக்க முடியாது. ஏனென்றால் ஐ.பி.ல் மற்றும்
சாம்பியன்ஸ் லீக் தொடரில் குறைந்த வயதில் அரை சதம் அடித்த வீரர் சஞ்சு சாம்சன்
தான்.
வரும் ஐ.பி.எல் தொடரிலும் சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் அணிக்காக விளையாட உள்ளார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று
திடீரென தனது நீண்ட நாள் காதலி சாருலதாவை சஞ்சு சாம்சன் திருமணம் செய்து கொண்டார்.
24 வயதே ஆகும் சஞ்சு திடீர் திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. அதே
சமயம் சஞ்சுவும் – சாரு லதாவும் கல்லூரி காலம் தொட்டே நண்பர்கள் என்பதும், பிறகு
காதலர்களானதும் தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் எளிமையாக நடைபெற்ற
திருமணத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. திருமணம்
எளிமையாக நடைபெற்று இருந்தாலும் வரவேற்பை கிரான்டாக நடத்த உள்ளதாக சஞ்சு சாம்சன்
கூறியுள்ளார். வரவேற்பு நிகழ்ச்சியில் தனது நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்
பங்கேற்பார்கள் என்றும் சஞ்சு கூறியுள்ளார்.
நீண்ட நாள் காதலன் தற்போது கணவன் ஆகியுள்ளது
மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக சாருலதா கூறியுள்ளார். இந்த நாளுக்காகத்தான் பல
நாட்கள் காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சஞ்சு கிரிக்கெட்டில் சாதிக்க
அவருக்கு துணை நிற்க உள்ளதாகவும் சாரு கூறியுள்ளார்.