ஆஸியை தெறிக்க விட்டு மீண்டும் பினிசராக மாறிய தோனி! தொடரையும் வென்றது இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.


இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை பேட் செய்ய பணித்தது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 230 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சஹால் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்களை சாய்த்தார். ஹண்ட்ஸ்கோம்ப் 58  ரன்களையும், ஷான் மார்ஷ் 39 ரன்களையும் எடுத்தனர். 

பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் 23 ரன்களுக்கும், ரோஹித் சர்மா 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கோஹ்லி மற்றும் தோணி நிலைத்து நின்று ஆடினர். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த கோஹ்லி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் தோணியுடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். சிறப்பாக விளையாடிய தோணி 87 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஜாதவ் 61 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற உதவினார்.

சிறப்பாக பந்து வீசிய சஹாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக இருந்த தோனிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.