மிரட்டிய வேகப்பந்து வீச்சாளர்கள்! இன்னிங்ஸ் வெற்றி பெற்று மாஸ் காட்டிய இந்தியா!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 106 ரன்கள் எடுத்தது. இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலை பெற்றது.இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 136 ரன்களை விளாசினார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் வங்கதேச அணி தனது 2-வது இன்னிங்சில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.சிறப்பாக பந்து வீசிய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த இஷாந்த் சர்மா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.